News Just In

7/23/2024 08:51:00 AM

திருமலை வாகன விபத்தில் மூவருக்கு காயம்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

திருகோணமலை ஹொரவபொத்தானை பிரதான வீதி மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் இடம் பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்விபத்து திங்கட் கிழமை (22) காலை இடம் பெற்றுள்ளது

திருகோணமலையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேனின் டயருக்கு காற்று போனதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.

விபத்தின் போது வவுனியா பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளதாகவும் வாகனத்தில் ஒன்பது பேர் பயணித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

No comments: