(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் காணிப் பயன்பாடு தொடர்பான விளக்கமளித்தலும் வலுவூட்டலும் பாடசாலையின் கேட்போர் கூடத்தில்(23) இடம்பெற்றது.
அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கல்முனை பிரதேச செயலகத்தின் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் ஐ.எம் ஜௌபர், சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் ஏ.எச். எம்.சஞ்ஜீர் ஆகியோர் மாணவர்களுக்கு காணிப் பயன்பாடுகள் தொடர்பான விளக்கங்களை அளித்தனர்.
மேலும், காணிப் பயன்பாடுகளை நாம் எவ்வாறு கையாள வேண்டும், அதன் தன்மைகள், அமைப்புக்கள் பற்றி அறிந்து எவ்வாறான வேலைத் திட்டங்களை இலகுவாக மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான விளக்கங்களையும் காணொளிமுலம் மாணவர்களுக்கு முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் ஆலோசனை வழிகாட்டல் பிரிவிற்குப் பொறுப்பான ஆசிரியரும், மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments: