(எம்.எம்.ஜெஸ்மின்)
கடந்த காலங்களில் கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய மாணவர்கள் விளையாட்டுத்துறையில் பல சாதனைகளை புரிந்து வந்துள்ளனர்.
கோட்ட மட்டம்,வலய மட்டம் இதற்காக, மாகாண மட்டம் மற்றும் தேசிய ரீதியில் பல சாதனைகளை புரிவதற்கு இப் பாடசாலை மானவர்களை சிறந்த முறையில் ஊக்கமளித்து பயிற்சிகளை வழங்கிய விளையாட்டு பாட ஆசிரியராய்.எல்.ஸிபான், மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான எம்.ஏ.எம்.றியாழ், ஏ.டபிள்யூ.எம்.ஆஸாத் கான் , ஆகியோர்களை கௌரவிக்கும் நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலை அதிபர் எம்.ஏ.சலாம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் யூ.எல்.எம்.ஹாஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments: