News Just In

7/16/2024 06:38:00 PM

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!




வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், வைத்தியசாலை விடுதியில் தங்குவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சமூக ஊடகங்களில் ஏனைய வைத்தியர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களிற்கான ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், வைத்தியர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு நாளை ஆதாரங்களை சமர்ப்பிக்காவிட்டால், அவர் மீது வழக்கு தொடரலாம் என்றும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு அமைய இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதை வைத்தியர் அர்ச்சானா உறுதிப்படுத்தி, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சாவகச்சேரி வைத்தியர்களுக்கு எதிரான அவதூறு உள்ளிட்ட விவகாரங்களில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான 3 முறைப்பாடுகளில் இன்றையதினம் (16.07.2024) வைத்தியர் அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இன்றைய வழக்கு விசாரணையில் முறைப்பாடளித்த வைத்தியர்கள் சார்பில் சட்டத்தரணிகள்திருக்குமரன்,குருபரன்ஆகியோர்முன்னிலையாகியிருந்தனர்.

No comments: