News Just In

6/07/2024 11:14:00 AM

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல்!



மட்டக்களப்பு, புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் புனித மரியால் தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சமாதியில் இன்று (06) முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அன்னாரின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஈகைச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

1988 ஆம் ஆண்டு யூன் மாதம் 06 ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: