மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் மரணித்து 24 வருடங்கள் கழிந்து விட்டது. இந்த காலப்பகுதிக்குள் உலகம் எவ்வளோவோ பரிணாம வளர்ச்சியை கண்டு விட்டது. ஆனால் நமது மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறவில்லை என்றால் அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். என சம்மாந்துறை இளைஞர்கள் சந்திப்பின் போது அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்.
நமது மூளை தொடர்ச்சியாக ஒன்றுக்குப் பழக்கப்பட்டு இருக்கின்றபோது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அதற்கு மாற்றுக்கருத்தை தொடர்ச்சியாக நாம் மூளைக்கு வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் இன்னுமொருவர் வந்து மாற்றத்தை ஏற்படுத்தி எமது மக்களின் வறுமையை போக்குவார்கள் அல்லது நல்ல நிலைமைக்கு கொண்டு வருவார்கள் என்று என்னும் கருத்துக்கு மாற்றமாக அந்த நபர் ஏன் நாமாக இருக்க கூடாது என்ற கருத்தை விதையுங்கள்.
புதிய தொழில் துறைகளை என்னால் உருவாக்க முடியும். என்னால் பல பேருக்கு தொழில் வழங்க முடியும். ஒருமைப்பாட்டை உருவாக்கி ஒன்றாக பயணிக்க முடியும். என்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனூடாக பிராந்தியத்தையும், நாட்டையும் உயர்த்த முடியும். என்ற எண்ணத்தை விதைக்கும் முதல் ஆளாக எல்லோரும் மாறவேண்டும். அதனூடாக இன்னும் 10 வருடங்களுக்குள் எமது மக்கள் நிம்மதியாக வாழ்வது நாம் நம் கண் முன்னே காணலாம் என மேலும் தெரிவித்தார்
No comments: