
ஆசிரியர்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
சில தரப்பினர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோரிக்கைகளை வென்றெடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை சீர்குலைக்கும் வகையில், சில தரப்பினர் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆசிரியர்கள் ஐக்கியமாக செயற்படுதனை தடுக்கும் வகையிலான தொழிற்சங்கப் போராட்டமாக இதனை கருத வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் ஆசிரியர் அதிபர்களின் போராட்டத்தை சிதைக்கும் என அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
No comments: