மாளிகைக்காடு செய்தியாளர்
உலகில் மக்கள் சிறந்த வைத்திய சேவைகளை தமது காலடியில் பெறத்தொடங்கி பல தசாப்தங்கள் ஆகிவிட்டது. ஆனால் நாம் பெயரளவிலான வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டதற்கு சந்தோசப்படுகின்றோம் என்றால் நாம் சிறந்த தலைவர்களால் ஆளப்படவில்லை என்பதோடு நாம் சிறந்த தலைவர்களை உருவாக்கவுமில்லை என்றே தான் கூறவேண்டும் என கிழக்கு மாகாண அனைத்துப்பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளன பொருளாளரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.
சம்மாந்துறையில் இன்று (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், ஒவ்வொரு ஊரிலும் சிறந்த மருத்துவ சேவைகள் குறிப்பாக இருதய சத்திரசிகிச்சை நிலையங்களை உருவாக்கி இருக்கவேண்டிய காலம் இது. நமக்கு ஆயுர்வேத வைத்தியசாலை கூட எல்லாப்பகுதிகளிலும் கிடைக்கவில்லை.
அதனால் உங்கள் குழந்தைகளை நல்ல நவீன கல்வி கொண்ட தலைவர்களாக, மக்களைப்பற்றி சிந்திக்கக் கூடியவர்களாக, புதிய தொழில் திட்டங்களை அமுல்படுத்தக்கூடிய தலைவர்களாக குறிப்பாக தார்மீகம் கொண்ட தலைவர்களாக உருவாக்குங்கள். மற்றவர்களின் கால்பிடித்து வாழ்ந்தகாலம் போதும் என மேலும் தெரிவித்தார்
No comments: