News Just In

5/30/2024 01:42:00 PM

சென்னையில் இலங்கை தமிழ் மாணவர்களுக்கான “கலங்கரை” தொழில் வழிகாட்டுதல் பயிற்சி!




 அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் இலங்கைத் தமிழ் பள்ளி மாணவர்களுக்கான “கலங்கரை” தொழில் வழிகாட்டுதல் பயிற்சியை நடத்தியது.

இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் உள்ள 103 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சுமார் 57,772 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களில் 2023-24ம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த 2,256 மாணவ, மாணவியர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் பயிற்சி 29 மாவட்டங்களில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் நேற்று (மே 29) நடைபெற்றது.

No comments: