தற்போது சர்ப்பிரைஸ் கிப்ட் என்பது வடக்கு மக்களை பிடித்து ஆட்டுவித்து வருவதாகவும் இதனால் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் , தாயகத்தில் உள்ள நண்பொஅர்கள் மற்ரும் உறவினர்களுக்கு சர்ப்பிரைஸ் கிப்ட் அனுப்புவது பாக்ஷனாகி விட்டது. பணத்தை மடித்து பூங்கொத்துகளாவும் தெரியாதவர்களிடம் தம் இளம் மனைவிக்காக பரிசுப் பொருட்களை அனுப்புவதுமாக உள்ளனர்.
இதனால் சில குடும்பங்கள் பிரிந்த சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்ததன. அதுமட்டுமல்லாது அந்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படும் நிலையில் , எமக்கு சம்பந்தம் இல்லாதவர்களிடம் செல்லும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
அதேவேளை தனித்திருக்கும் நபர்களையும் , அவர்களின் வசதிகளையும் அறிமுகம் இல்ல நபர்களிடம் அறியப்படுத்துவதனால், கொலை கொள்லை, திருட்டு அதன் பின் விளைவுகள் பாரதூரமாகி விடுகின்ற சம்பவங்களும் அதிகமாகியுள்ளன.
எனவே உங்கள் அன்புரியவர்களுக்கு பரிசுகள் அனுப்புவது, அதுவும் அறிமுகம் இல்லாதவர்களிடச்ம் அதை கொடுத்தனுப்புவது எத்தனை ஆபத்தை விளைவிக்கும் என்பதை ஆராயாது இவ்வாறான சர்ப்பிரைஸ் கிப்ட் அனுப்பும் செலய்பாடாது நல்லதல்ல என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளன
No comments: