News Just In

5/29/2024 07:09:00 PM

இந்தியாவின் தலைநகரில் வரலாறு காணாத வெப்பநிலை !





இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உச்சம் கொடுக்கும் நிலையில், இன்று டெல்லியில் 49.9 C  வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் 50 C  வரை வெயில் பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மாநில அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அங்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டெல்லியில் குடிநீரை பயன்படுத்தி கார்களைக் கழுவுதல், வீட்டுப் பயன்பாட்டிற்கான குடிநீரை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல் மற்றும் நிரம்பி வழியும் நீர்த் தொட்டிகள் முதலான செயற்பாடுகளுக்கு இந்திய மதிப்பில் 2000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெப்ப அலைகள் உக்கிரமடைந்தமையே இந் நிலைமைக்கான காரணம் என குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், பீகாரின் செய்க்புரா என்ற பகுதியிலுள்ள பாடசாலையில் வெப்ப அலையை தாங்க முடியாத மாணவிகள் சிலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

மயங்கி விழுந்த குறித்த மாணவிகளை மீட்ட பாடசாலை நிர்வாகம் உடனடியாக முதலுதவி வழங்கியுள்ளதுடன், வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்

No comments: