News Just In

5/29/2024 07:16:00 PM

யாழில் காணி சுவீகரிக்க தயாராகும் கடற்படை: எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு!




சுழிபுரத்தில் கடற்படைக்குக் காணி சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் இடம்பெறப்போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், நாளை காலை 9.00 மணிக்கு இடம்பெறப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார

“எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளைக் கடற்படைக்குச் சுவீகரிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எமது மண்ணைக் காக்க நாளை காலை சுழிபுரத்தில் அணிதிரளுமாறு தாயகத்தை நேசிக்கும் அனைவரையும் அன்புரிமையோடு அழைக்கின்றோம்” என கூறியுள்ளார்

No comments: