
இலங்கையின் நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள்(Sri Lankan Army) ரஷ்ய எல்லையிலுள்ள கொலைகளங்களில் உயிரிழப்பதாக, அங்கிருந்து தப்பிய முன்னாள் படைவீரர் ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், "இலங்கையிலிருந்து பலகுழுக்களால் வெளிநாட்டு வேலைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இலங்கையை(Sri Lanka) சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதே எண்ணிக்கையிலானவர்கள் டொனெட்ஸ்க் போன்ற பிராந்தியங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கியூபா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு கூலிப்படையினர் காணப்படுகின்றனர். ரஷ்ய - உக்ரைன்(Russia - Ukraine) போர்களங்களிற்கு ஆட்களை சேர்ப்பது கடந்த மூன்று மாதங்களில் தீவிரமடைந்துள்ளது.
கடந்த வருடம் ஒவ்வொரு மாதமும் மூன்றுபேர் அல்லது நான்கு பேரே சேர்க்கப்பட்டனர்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஓய்வுபெற்ற முன்னாள் அதிகாரிகளே, என்னை ரஷ்ய உக்ரைன் போர்முனையில் பணியாற்ற தெரிவு செய்தனர்.
அதற்காக 1.6 மில்லியன் செலுத்தியதாகவும் முகாமில் உதவியாளராக பணியாற்றும் வேலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments: