News Just In

5/10/2024 10:29:00 AM

சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் கட்சியை புனரமைத்த மரம் !


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட மலையடிக்கிராமம் -02ம் கிராம சேவகர் பிரிவுக்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக்கூட்டம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் இன்று (09) சம்மாந்துறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.சீ. சமால்டீன், அரசியல் அதி உயர் பீட உறுப்பினர்களான முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.சௌபீர், அப்துல் அஸீஸ், சம்மாந்துறை மத்திய குழுவின் செயலாளர் ஏ.ஜே.எம். அஸாறுபீன், சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளர் அர்சாத் இஸ்மாயில் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

No comments: