News Just In

5/13/2024 01:44:00 PM

கல்முனை மாநகர மக்கள் வங்கி நிரந்தரகட்டிடத்திற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கி விலைமனு கோரப்பட்டுள்ளது !



நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்து வந்த மக்கள் வங்கி கிளைக்கட்டிடத்திற்கான தேவையறிந்து திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீ.ல.மு.கா. பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக கட்டிட நிர்மாணிப்பு பணிகளை மேற்கொள்ள மக்கள் வங்கி தலைமையக்கத்தினால் விலைமனு கோரப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடமும், மக்கள் வங்கி தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இடம்பெற்ற ஆலோசனைகளின் பேரில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்க 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு முன்னாயத்த பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்த இந்த வங்கிக்கிளை கட்டிடத்தொகுதி அமைப்பது தொடர்பில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மக்கள் வங்கி தவிசாளரை ஹரீஸ் எம்.பி சந்தித்து கல்முனை மாநகர பொதுமக்களும், வர்த்தகர்களும் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் சிக்கல்களை எடுத்துரைத்து துரித கதியில் இந்த கட்டிடம் அமைக்கவேண்டிய அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தியிருந்தார். அன்றே இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தேவையான 100 மில்லியன் நிதியை மக்கள் வங்கி தவிசாளர் ஒதுக்கீடு செய்திருந்த நிலையில் இப்போது அந்த கட்டிடத்தை நிர்மாணிக்க விலைமனு கோரப்பட்டுள்ளது.

இந்த வங்கிக்கிளை நிரந்தர கட்டிடத்தில் கல்முனை மாநகரில் அமைய இருப்பதனூடாக கல்முனை மாநகர மக்கள் மற்றும் வர்த்தகர்கள் முழுமையாக நன்மையடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: