News Just In

4/02/2024 08:50:00 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: சபையில் குரலெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்!



உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் நேற்று  நாடாளுமன்றில் வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தகவல் அறிந்தும் அதனை மறைத்தவர்கள் யார்? தாக்குதல்இடம்பெறவுள்ளதாகஅறிந்திருந்தும்அதனைவெளிப்படுத்தாமைக்கான காரணி என்ன?

இந்த விடயத்தில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி பல தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார். இந்த கேள்விக்கு அரசாங்கம் இன்றே பதிலளிக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டு முதல் இந்த கேள்விக்கான பதிலை எதிர்ப்பார்த்து லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.

தாக்குதல் தொடர்பான பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும் வெளியிடப்பட்டன. எனவே அரசாங்கம் அந்த தகவல்களை மறைப்பதற்கான காரணி என்ன? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆனால் இதுவரை நடைபெறவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினால் அதிக லாபமடைந்தவர்; கோட்டாபய ராஜபக்ஷ.
இந்திய புலனாய்வு பிரிவு வழங்கிய வட்ஸ் அப் தகவல்களை புலனாய்வு பிரிவுக்கு வழங்கியது யார்?” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments: