News Just In

4/23/2024 12:22:00 PM

அம்மனுக்கு சாத்திய சேலை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் !





புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்திய சேலை 16 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் நேற்று இடம்பெற்றது.

இதில் கண்ணகியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு இடம்பெற்ற விசேட அபிஷேகங்களைத் தொடர்ந்து வசந்த மண்டபத்திலிருந்து எழுந்தருளிய அம்பாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பீடத்தில் வீற்றிருந்து முத்தேரேறி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்த நிலையில் கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்திய சேலை ஒன்று ஏலத்தில் விடப்பட்டது.

அதில் சேலை ஒன்றுக்கு 16 இலட்சம் ரூபாவைக் கொடுத்து பக்தர் ஒருவர் அந்த சேலையை வாங்கியுள்ளதாக என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.


No comments: