சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சுப்பதவியில் இருந்து பதவியிலிருந்து விரகியுள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று (6.2.2024) ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிக்கடை சிறைச்சாலை
சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தற்போது வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், மோசடிச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள ஒருவரை தொடர்ந்தும் அமைச்சரவையில் வைத்திருப்பதன் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடும் என்று பல்வேறு தரப்புகள் குற்றஞ்சாட்டி இருந்த நிலையில் அவர் இன்று பதவி விலகல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: