News Just In

2/02/2024 02:17:00 PM

லிட்ரோ எரிவாயு விலை குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!




லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்தார்.

பொது மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு இன்னல்கள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இம்மாதத்திலும் விலை அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், நிறுவனம் நட்டத்தை தாங்கிக்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் மேலும் தெரிவித்தார்

No comments: