News Just In

2/06/2024 07:12:00 PM

இரண்டு நாட்கள் கெக்கிராவ - பலுகஸ்வெவ ரயில் கடவைக்கு பூட்டு!



கெக்கிராவ மற்றும் பலுகஸ்வெவ ரயில் நிலையங்களுக்கு இடையிலான கடவை திருத்த வேலைகளுக்காக இரண்டு நாட்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் மூடப்படவுள்ளதாக இலங்கை ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ரயில் கடவை நாளை புதன்கிழமை (07) காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரை பகுதியளவில் மூடப்படும். அத்தோடு, காலை 10:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை ரயில் கடவை முழுமையாக மூடப்படும்.

இதன் காரணமாக வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

ரயில் கடவை நாளை மறுதினம் வியாழக்கிழமை (08) காலை 6:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை பகுதியளவில் மூடப்படும்.

No comments: