News Just In

2/14/2024 11:08:00 AM

சாய்ந்தமருது இளம் தொழிலதிபர், நீதிக்கான மய்யத்தினால் கெளரவிப்பு!

 


(எஸ்.அஷ்ரப்கான்)
இந்தியா, திருச்சியில் சிறந்த வர்த்தக முகாமைத்துவ பணிப்பாளர்களுக்கான ஆசிய விருது - 2023, பெற்ற நீதிக்கான மய்யத்தின் பொருளாளர், இளம் தொழிலதிபர் அப்துல் அஸீஸ் அஷ்ரஃப் அலி நீதிக்கான மய்யத்தினால் கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வு நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமாணி ஷஃபி எச். இஸ்மாயில் தலைமையில் சாய்ந்தமருது வொலிவேரியன் கலாச்சார மத்திய நிலையத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதில் நீதிக்கான மய்யத்தின் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றிம்சான் உள்ளிட்ட நீதிக்கான மய்யத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆசிய விருது பெற்ற இளம் தொழிலதிபர் அப்துல் அஸீஸ் அஷ்ரஃப் அலி நீதிக்கான மய்யத்தின் பிரதிநிதிகளால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக் கப்பட்டார்.

No comments: