News Just In

2/13/2024 05:23:00 AM

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரி!




முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அவர் இன்றைய தினம் (12.2.2024) அதிகாலை இந்தியா புறப்பட்டுச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ. 284 ரக விமானத்தில் மைத்திரிபால சிறிசேன இந்தியா பயணம் செய்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பினை ஏற்றுக்கொண்டு மைத்திரி இந்தியா விஜயம் செய்கின்றார்.

இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு அவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: