News Just In

2/15/2024 01:27:00 PM

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!



இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால தடைவிதித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை நடத்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் முன்னிலையாகியிருந்தார்.

மேலும் தேசிய மாநாட்டுக்கு தடைகோரி யாழ். நீதிமன்றத்திலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: