கனடா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள முக்கிய சவாலை சமாளிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் இரு வருடங்களுக்கு சர்வதேச மாணவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை கனேடிய அரசு மேற்கொள்ளவுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டுக்கான புதிய சர்வதேச மாணவர்களின் வருகையானது 360,000ஆக குறைக்கப்படவுள்ளது எனவும், புலம்பெயர் மாணவர்கள் கனடா நாட்டின், சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பின் வளர்ச்சிக்கு கடந்த காலங்களில் பெரிதும் பங்காற்றி வந்துள்ளார்கள் எனவும் மில்லர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், சர்வதேச மாணவர்களின் வருகை தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அண்மைக்காலமாக கனடாவில் சர்வதேச மாணவர்களின் வருகை அதிகரித்துள்ள விடயமானது, கனேடிய அரசாங்கத்திற்கு பெரும் சவாலை வழங்கியுள்ளது
No comments: