News Just In

1/08/2024 06:53:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழையினால் தாழ்நிலப் பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில்!





மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (07) காலை முதல் மீண்டும் அடைமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லரிப்பு பிரதேசத்தில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட் புகுந்ததினால் பாதிக்கப்பட்டவர்கள் இடைத் தங்கல் முகாம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அரசு மற்றும் நலன் விரும்பிகளினால் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.சிலர் உயரமான இடங்களில் தங்களது கால் நடைகளை பாதுகாப்பதற்காக தற்காலிக கொட்டில் அமைத்துள்ளனர்.போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமையால் படகுகள் மூலம் தமது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை 10 மணி முதல் மீண்டும் மாவட்டத்தில் அடை மழை பெய்து வருகிறது.

வயல்நிலங்கள்,சிறுதோட்டப்பயிர்கள்என்பனபாதிக்கப்பட்டுள்ளதாகவும்கால்நடைகளும் இறந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர்தெரிவிக்கினறனர். மருத்துவ சேவையும், குடிநீரும் தேவையாகவுள்ளதாக தெரிவிக்கினறனர். 


No comments: