News Just In

12/23/2023 12:32:00 PM

கிளிநொச்சியில் பெரும்சோகத்தை ஏற்படுத்திய சிறுமியின் பரிதாப உயிரிழப்பு!

கிளிநொச்சி பூநகரி நெடுங்குளத்தில் வெள்ளம் நிரம்பிய குழியில் தவறி விழுந்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று முன் தினம் (21) மாலை 05.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் புஸ்பராசா மிதுசனா என்ற ஒன்றரை வயது குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குழந்தையின் இறப்பு தொடர்பாக பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை கடந்த தினங்களில் பெய்த கடும் மழை காரணமாக கிளிநோசி, முல்லைத்தீவு பகுதி மக்கள் பெரும் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: