தமிழ் பற்றாளர், ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என பன்முகம் கொண்ட ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்தும் நீதி கிடைக்காமல் உள்ளது.
2005ஆம் ஆண்டு நத்தார் தினம் அன்று மட்டக்களப்பு புனித மரியாள் இணைப்பேராலயத்தின் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்ட பொது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டு கொல்லப்பட்டார்.
செய்தியாளராக 1960ஆம் ஆண்டிலிருந்து பணியாற்ற தொடங்கிய அவர், குணசேனா பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட தினபதி, சிந்தாமணி மற்றும் சண் போன்ற பத்திரிகைகளுக்கு மட்டக்களப்பு செய்தியாளராக பணியாற்றி வந்தார்.
No comments: