News Just In

12/25/2023 07:22:00 PM

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்!




மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிகோரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று (25.12.2023) நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையிலேயே குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் 18ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது இவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: