
இங்கிலாந்து நாட்டில் மாதவிடாய் வலியை குறைப்பதற்கு நண்பர்கள் பேச்சை கேட்டு கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட 16 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தில் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 16 வயது சிறுமிக்கு மாதவிடாய் வலி அதிகமாக இருந்ததை அடுத்து வலியை குறைப்பதற்கு நண்பர்களின் பேச்சை கேட்டு கருத்தடை மாத்திரை உட்கொண்டார்.
கருத்தடை மாத்திரை உட்கொண்ட சில நிமிடங்களில் சிறுமி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மூளையில் ரத்தம் உறைந்து உயிரிழப்பு ஏற்பட்டதாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாதவிடாய் வலியை குறைப்பதற்கு நண்பர்கள் பேச்சை பேச்சை கேட்டு கருத்தடை மாத்திரை எடுத்து, பரிதாபமாக உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர்.
அதேவேளை மகளை இழந்த சோகத்திலும் அவர்கள் உயிரிழந்த சிறுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்துள்ளதாக கூறப்படுகின்றது குறிப்பிடத்தக்கது
No comments: