News Just In

10/22/2023 08:35:00 AM

தொழில் வாய்ப்புக்காக சவூதி அரேபியாவுக்கு சென்ற இலங்கை பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு!

தொழில் வாய்ப்புக்காக சவூதி அரேபியாவுக்கு சென்ற இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த பெண் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்ததுடன், அவரின் மரணம் குறித்து கிராம உத்தியோகத்தரின் ஊடாக குடும்பத்தார், வினவியதை அடுத்தே தெரியவந்துள்ளது.

ஹொரணை – அங்குருவாதொட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகம் ஒன்றின் ஊடாக அவர் 2021ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.

தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

இந்த நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து, அவரது குடும்பத்தினர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

No comments: