News Just In

10/14/2023 05:46:00 PM

குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்!



உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Rohit Sharma தலைமையிலான இந்திய அணி, Barbar Azam தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளும் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் தலைவர் Babar Azam அதிகபட்சமாக 50 ஓட்டங்களை பெற்றதுடன் Mohammad Rizwan 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Jasprit Bumrah, Mohammed Siraj, Hardik Pandya, Kuldeep Yadav, Ravindra Jadeja ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதன்படி இந்தியஅணிக்கு 192 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

No comments: