News Just In

10/22/2023 10:51:00 AM

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!




பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளங்கள் அதிகரிக்கப்படலாம் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனைத்து தரங்களுக்குமாக சுமார் ஐயாயிரம் பாடசாலை அதிபர்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதம் 4ம் திகதி இந்த நியமனங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஏதேனும் ஓர் வகையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என நம்புவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகளை களையுமாறு அராங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: