News Just In

9/03/2023 04:32:00 PM

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை திகதி இதேவேளை இவ்வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை திகதியை மாற்றுவது குறித்து எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில் வெளியாகும் எனவும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

No comments: