நாட்டில் எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் !
எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பிரதேசங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், வடமேல், ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
9/26/2023 06:24:00 PM
நாட்டில் எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments: