News Just In

9/26/2023 02:25:00 PM

மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்ல முகாமையாளர் திடிரென மரணம் !





மட்டக்களப்பு சித்தாண்டி யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிக்கொண்டிருந்த இல்ல முகாமையாளர் திடிரென மயக்கமுற்ற நிலையில் மரணமடைந்தார்.

நேற்று (25) மாலை நடைபெற்ற நிகழ்வில் மாவடிவேம்பைச் சேர்ந்த 63 வயதுடைய சிவசம்பு பாக்கியராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புலம்பெயர் நாடொன்றில் வசிக்கும் நன்கொடையாளரால் இல்லதிற்கு வழங்கப்பட்ட 2 இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி மூடைகள் வழங்கப்பட்டது.

இந்த அரிசி மூடைகள் கையளிக்கும் நிகழ்வில் உதவி புரிந்த நபருக்கு நன்றி கூறி உரையாற்றும்போது திடிரென மயக்கமுற்றவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணமடைந்தார்.

சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் சந்திவெளி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த முகாமையாளர் யோகசுவாமி சைவ மகளிர் இல்லத்தின் வளர்ச்சிக்காக நீண்டகாலமாக சேவையாற்றியிருந்தார்.
அவரது உயிரிழப்பு பிரதேசத்தில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

No comments: