News Just In

9/01/2023 10:44:00 AM

14வது இலங்கை பல்கலைக்கழக விளையாட்டு விழா கிழக்குப் பல்கலைக்கழகத்தில்.!





நூருல் ஹுதா உமர்

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான நிகழ்வுகளில் மிக பிரமாண்டமாக வர்ணிக்கப்படும் இந்நிகழ்வை இம்முறை இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம் தலைமையேற்று நடாத்துகின்றது.

இலங்கையில் உள்ள 16 தேசிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 6000 விளையாட்டு வீரர்கள் பங்குகொள்ள எதிர்பார்க்கப்படும் இவ்விளையாட்டுப் போட்டியில் 40 நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர். வ.கணகசிங்கம் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினரின் அழைப்பின் பேரில், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதம மந்திரி மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன பிரதம அதிதியாகவும், கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேமஜயந்த கௌரவ அதிதியாகவும், விஷேட அதிதிகளாக கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க மற்றும் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் உப-தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பீ. உடவத்த ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள 17 தேசிய பல்கலைக்கழகங்களினதும் உபவேந்தர்களும் கலந்துகொள்வதும் இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாகும்.

பல்வேறு கலாச்சார நிகழ்வுகளுடன்,வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வளாக விளையாட்டு மைதானத்தில் இன்று பி.ப 02.30 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்யப்படும் இவ்விளையாட்டு போட்டி எதிர்வரும் 8ம் திகதி நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: