News Just In

8/02/2023 07:17:00 AM

நுவரெலியா மாவட்டத்தில் மலை உச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள லிந்துலை - கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் ஊடாக செல்லும் வனப்பகுதியில் இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலத்தை நேற்றைய தினம் (01-08-2023) மாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கல்கந்தை மலை உச்சியில் பெண்ணொருவர் சடலமாக கிடப்பதாக லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் மலை உச்சிக்கு சென்ற பொலிஸார் அங்கிருந்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

மேலும், பல்கலைகழக மாணவர்கள் ஆராய்ச்சிக்காக அடிக்கடி கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சிக்கு வருகை தருவார்கள். குறித்த பகுதியில் இருந்தே இந்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா நீதி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து மரண விசாரணை செய்த பின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதணைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: