News Just In

8/29/2023 08:06:00 AM

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர்!

இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த வார இறுதியில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, ஆய்வுக் கப்பல் ஒன்றின் விஜயத்தை அனுமதிக்குமாறு சீனா விடுத்த கோரிக்கையை பரிசீலித்து வரும் நிலையிலேயே அவர் இந்த இரண்டு நாள் விஜயத்திற்காக வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், திருகோணமலையில் இந்தியாவுடன் இணைந்து முதலீடு செய்யப்பட்டுள்ள எண்ணெய் தாங்கி வளாகத்தின் கூட்டு அபிவிருத்தியை பார்வையிட இந்திய பாதுகாப்பு அமைச்சர் விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: