News Just In

8/29/2023 08:01:00 AM

தையிட்டி விகாரையை அகற்ற கோரி இன்று இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம்!

தையிட்டி விகாரையை அகற்ற கோரி கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப் போராட்டமானது இன்று (29.08.2023) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்து, நாளை (30.08.2023) மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவாள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எமது மக்களின் எதிர்ப்பைக்க காட்ட அனைவரையும் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்" என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

No comments: