News Just In

7/04/2023 05:20:00 PM

ஆந்திரா மாநில முதல்வரும், கிழக்கு ஆளுநர் செந்திலும் சந்திப்பு!

ஆந்திரா மாநில முதல்வரும், கிழக்கு ஆளுநர் செந்திலும் சந்திப்பு!





(அபு அலா)

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

BOI ஆடைகள் பூங்கா குறித்தும், திருகோணமலை துறைமுகத்திலுள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் பக்தர்கள் அதிகளவிலுள்ள நிலையில் வயது மூப்பு காரணமாக திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி திருமலை கோவில் அமைக்க கோரிக்கையொன்றையும் விடுத்தார்.

இக்கோரிக்கைக்கு சாதகமான பதிலை ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி வழங்கியதுடன், ஆந்திர முதலமைச்சரினால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு திருப்பதி பெருமாள் சுவாமி சிலையை வழங்கி கெளரவித்தார்.



No comments: