News Just In

7/26/2023 05:12:00 PM

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் ஹாபீஸ் நஷீர் அஹமட் உரை!

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியில் யாருமே பொறுப்பெடுக்க முடியாத நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாரம் எடுத்து நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பியுள்ளார் என்று சுற்றாடல் அமைச்சரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் புதிய கட்டட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை (25.07.2023) மாலை பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக சுற்றாடல் அமைச்சரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற் சொன்னவாறு தெரிவித்hர்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். முன்னாள் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸ நாட்டை ஆட்சி செய்வதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் நாட்டை பாரம் எடுத்து ஆட்சியை செய்யுமாறு தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை அழைத்து சொன்னபோது அவர் பின்வாங்கிய நிலையில் நாட்டில் ஒரு புரட்சி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எல்லோர் மத்தியிலும் இருந்தது அந்த சந்தர்ப்பத்தில்தான் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தைரியத்தோடு நாட்டை பாரம் எடுத்து பொருளாதார வீழ்ச்சியில் இருந்த நாட்டை கட்டி எழுப்பிக் கொண்டு இருக்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தில் தழிழ்தரப்பு அரசியல் கட்சிகளுட்ன் பேச்சுவார்த்தை இடம் பெற்று அவர்களது கோறிக்கைகளை கேட்டறிந்து கொண்டதுடன் முஸ்லீம்களுடைய அதிகார பகிர்வில் பங்கு என்ன என்கின்ற விடயத்தை மிகவும் தெட்டத் தெளிவாக ஆணித்தரமாக முஸ்லீம் அரசியல் தலைமைகள் எல்லோரும் உடன்பாட்டகு;கு வரவேண்டிய தேவை இருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது இரவோடு இரவாக முஸ்லிம்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்ட ஒரு அரச சாசனமாகத்தான் பதின்மூன்றாவது திருத்தம் அப்போது இருந்தது.அதன் பின்னர் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு முஸ்லீம் சமுகத்தினுடைய ஒட்டு மொத்த அரசியல் தலைவிதியை மாற்றிய ஒரு வரலாற்றினை நாங்கள் எப்போதம் மறந்துவிட முடியாது.

அவ்வாறானதொரு வரலாறு மீண்டும் எழுதப்பட்டு விடக்கூடாது என்பதற்காக நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றோம் இரவோடு இரவாகத்தான் பதின்மூன்றாவது திருத்தம் இந்தியாவினுடைய அழுத்தத்தினால் நிறைவேற்றப்பட்டது.அப்போது முஸ்லீம்களால் எதுவும் பேசமுடியாமல் இருந்தது அப்போதிருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்கள் முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் சென்று முஸ்லீம்களது அரசியல் நிலவரம் என்ன என்று கதைப்பதற்கு சென்ற வேளையில் உங்களுக்கு கதவு திறந்து இருக்கின்றது வெளியே போகலாம் என்று சொல்லப்பட்டது. அவ்வாறான ஒரு நிலமைக்கு முஸ்லீம்கள் மின்டும் தள்ளப்பட்டு விடக்கூடாது என்று நாங்கள் தெளிவாக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக முன்னால் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் ஏனைய அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், ஏறாவூர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் ஆகியோர் கலந்து கொண்டதுடன் திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டின் இணைப்பு செயலாளர் ஏ.ஏ.நாஸர், கல்குடா தொகுதி இணைப்பாளர் எம்.ஜவாத் மற்றும் பொதுமக்கள்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காகிதநகர் கிராம சேவகர் பிரிவில் அரச காணியை பராமரித்து வந்தவர்களுக்கு காணி உறுதிப் பத்திரமுமத் வழங்கப்பட்டதுடன் மா மரக்கன்றுகளும் நடப்பட்டது.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments: