பிரித்தானியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து கடவுச்சீட்டுகளிலும் பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது.
இந்த வாரத்தில் இருந்து மன்னர் பெயரால் இனி பிரித்தானிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.
இந்த நிலையில் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக ஒரு பெரிய மாற்றம் செய்யப்படுவதால், இந்த வாரத்திலிருந்து புதிய கடவுச்சீட்டுகளைப் பெறும் பிரித்தானியர்கள் இதனை பார்க்கலாம்.
கடைசி ஆண் மன்னரான சார்லஸின் தாத்தா கிங் ஜார்ஜ் VI இன் ஆட்சியின் முடிவில் 1952 க்குப் பின்னர் முதல் முறையாக “His Majesty” என்ற தலைப்பில் 3ம் சார்லஸ் மன்னரின் பெயரில் கடவுச்சீட்டுகளில் ” “His Majesty” ” என்ற பட்டத்தை இந்த வாரம் வெளியிடவுள்ளது.
மேலும் பல தசாப்தங்களாக, ராணி 2ம் எலிசபெத் ஆட்சியின் போது ”Her Majesty” என்ற பெயரில் அதிகாரப்பூர்வ பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இது “வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம்” என்று உள்துறை செயலர் சுயெல்லா பிரேவர்மேனால் விவரிக்கப்பட்டது.
No comments: