News Just In

7/05/2023 10:31:00 AM

சம்மாந்துறை (ATI) பணிப்பாளரின் ஆலோசனையில் பஸ் தரிப்பிடம் திறந்து வைப்பு!

சம்மாந்துறை (ATI) பணிப்பாளரின் ஆலோசனையில் பஸ் தரிப்பிடம் திறந்து வைப்பு!




சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் கல்விநிறுவனத்தின் (ATI) பணிப்பாளர் எஸ்.எல். முஸ்தபா அவர்களின் ஆலோசனையின் கீழ் நஜா பவுண்டேசன் அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் முதலாம் வருட உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பகுதிநேர மாணவர்களின் ஒத்துழைப்புடன் சம்மாந்துறை உயர் தொழில் நுட்பவியல் கல்விநிறுவனத்தின்முன்பாக பிரதான பாதையில்அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம் திறக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (04) இடம் பெற்றது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை உயர் தொழி நுட்பவியல் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எல் முஸ்தபா, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் .எல் எம் ஹனிபா, சம்மாந்துறை பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர்எம்.எச்.எம்நவாஸ்,நஜா பவுண்டேசன் அமைப்பின் தலைவர் எஸ்.எம் நபீல்,சம்மாந்துறை உயர் தொழில்நுட்பவியல் கல்விநிறுவனத்தின்ஆங்கிலகற்கை துறை பொறுப்பாளர் எம்.பி நெளசாட்,கணக்கியல் துறை பொறுப்பாளர் பெரோஸ்,தகவல் தொழில்நுட்பதுறை பொறுப்பாளர் ஏ.ஏ.எம். மதீஹ் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முதலாம் வருட உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள சமூக பொறுப்புணர்வுகுறித்த குழுசெயற்திட்டத்திற்கு ஏற்ப இவ் வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டுமக்கள் பாவனைக்கென திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












No comments: