News Just In

7/27/2023 10:10:00 AM

355 ரூபாவாகும் டொலரின் பெறுமதி! மேலும் வலுவிழக்கப்போகும் ரூபா !



ஆசியாவிலேயே மிகவும் மோசமாக செயற்படும் நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாகவும், இந்த நிலை நீடிக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும், ஆண்டின் இறுதியில் ரூபாவிற்கு நிகராக டொலரின் பெறுமதி 355 ரூபாவாக இருக்கும் எனவும் “புளூம்பேர்க்” செய்தி வெளியிட்டுள்ளது.

வட்டி வீதங்களை குறைத்தமை மற்றும் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியமை என்பன இந்த நிலைக்கு காரணமென புளூம்பேர்க் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் ஆசியாவில் சிறந்த நாணயமாக இலங்கை ரூபா செயற்பட்டதாக புளூம்பேர்க் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் 8 வீதம் வலுவிழந்து 355 ரூபாவாக பதிவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: