டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 22 ஆண்டுகால இலங்கை அணியின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதுடன் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ரோகித் சர்மா எவரும் முறியடிக்க முடியாத புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை அணி 13.2 ஓவரில் 100 ஓட்டங்களை கடந்திருந்தது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் இந்திய அணி 12.2 ஓவரில் 100 ஓட்டங்களை எடுத்து இலங்கை அணியின் சாதனையை முறியடித்துள்ளது.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான சாதனையை இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார். இதனை எளிதில் எந்த கிரிக்கெட் வீரரும் முறியடிக்க முடியாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளார்கள்.
அதாவது இந்த போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் ரோஹித் சர்மா 44 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டி வரலாற்றில் தொடர்ந்து 30 இனிங்ஸ்களில் இரட்டை இலக்க ஓட்டங்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த 30 இனிங்ஸ்களில் ரோஹித் சர்மா எடுத்தஓட்டங்கள்-
12, 161, 26, 66, 25*, 49, 34, 30, 36, 12*, 83, 21, 19, 59, 11, 127, 29, 15, 46, 120, 32, 31, 12, 12, 35, 15, 43, 103, 80. 57.
No comments: