News Just In

6/27/2023 05:41:00 PM

மின் கட்டணத்தில் ஜூலை 01 முதல் நடைமுறைக்கு வரும் புதிய முறை!

டிஜிட்டல் வடிவில் மின் கட்டணம் வழங்கும் முறை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இதற்கமைய 03 பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் மின் கட்டணம் வழங்கும் முறை ஜூலை 01 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக மின் கட்டணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த முறை தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசங்களில் வசிக்கும் மின்சார பாவனையாளர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பதிவு செய்யும் முறை:
இதற்கு பின்வருமாறு SMS மூலம் பதிவு செய்யலாம்.

REG என டைப் செய்து உங்கள் A/C எண்ணை குறிப்பிட்டு 1987க்கு அனுப்பவும். அல்லது http://ebill.ceb.lk என்ற இணையத்தளத்துக்கு செல்லலாம்.

No comments: