பெரும்போக விவசாயத்திற்கு உரங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர் இறுதி வரை நீடிக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
விவசாய சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர்,
"அம்பாறை மற்றும் வடக்கின் சில மாவட்டங்களிலும் வடமத்திய மாகாணத்திலும் தற்போது பெரும்போக அறுவடை காலம் என்பதனால் மீண்டும் உரமிட வேண்டிய தேவை இல்லை.
ஆனால் தற்போது வழங்கப்படும் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் இரண்டு மாதங்களாக காணப்படுவதால், யூரியா மற்றும் ஏனைய உரங்களை வாங்குவதற்கு விவசாயிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.
இதனைக்கருத்தில் கொண்டு செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க தீர்மானித்துள்ளோம்.
ஆகவே தற்போது வழங்கப்படும் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் இந்த வருடம் டிசம்பர் இறுதி வரை நீடிக்கப்படும்.
எந்தவிதமான சிக்கலும் இன்றி விவசாயிகள் தமது உரங்களை கொள்வனவு செய்ய முடியும்." என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments: