News Just In

5/28/2023 12:28:00 PM

கிழக்கு மாகாண புதிய ஆளுனர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மக்களை சந்திக்கிறார்!



(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
கிழக்கு மாகாண புதிய ஆளுனர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் மக்கள் சந்திப்பு எதிர்வரும் ஜூன் 1ம் திகதி மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.

இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகள், தேவைகளை கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் மக்கள் சந்திப்பு மாவட்ட செயலகத்தில் பி.ப. 2.00 மணிதொடக்கம் 4.00 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுனரின் பதவி அணியினர் அரச உயர் அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளமை சிறப்பம்சமாகும்.

இதனூடாக பொதுமக்கள் தமது பிரச்சினைகளை ஆளுனரிடம் கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வாய்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள


No comments: