
இந்தியா பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் மேற்படி அமைப்பினது விசேட அழைப்பி;ன் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டார்.
மேற்படி கருத்தரங்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய உயர் அதிகாரி ராம் ஆதவ் மற்றும் பல நாடுகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் அவற்றுக்கான திர்வுத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டிருந்தன.
மேலும் மேற்படி கலந்துரையாடலில் இந்து சமுத்திரப் பிராந்திய விடயங்களில் தமிழர்களின் எதிர்காலப் பங்களிப்புக்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் விரிவாகக் கலந்துரையாடியிருந்தார்.
அத்துடன் இலங்கையைப் பொறுத்தளவில் வடக்குக் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களில் வாழும் அதிகளவான ஈழத்தழிழர்களின் பங்களிப்புத் தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: