News Just In

2/28/2023 08:24:00 PM

இலங்கையில் முடிவுக்கு வந்த நடைமுறை! பணத்தை அச்சிட முடியாது என அரசாங்கம் அறிவிப்பு




கடனைப் பெற்றுக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் சகல அரசாங்கங்களும் பணத்தை அச்சிட்டதாக, வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,கடந்த அரசாங்கங்கள் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடன்களை பெற்றன. கடன்கள் போதுமானதாக இல்லாதபோது, தானாகவே பணத்தை ஆட்சியாளர்கள் அச்சிடத் தொடங்கினர்.

நாடு திவாலாகிவிட்டதாகவும், கடனைச் செலுத்த முடியாது என்றும் ஏற்கனவே அறிவித்ததால், எந்த நாட்டிலும் கடன் பெற முடியாத நிலை, இன்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இப்போது எங்களால் பணத்தை அச்சிட முடியாது. நாங்கள் தொடர்ந்து பணத்தை அச்சிட்டால், நாடு முற்றிலும் வீழ்ச்சியடையும். அவர்களின் கடன் வசதியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் IMF கூறியுள்ளது.

நாங்கள் கடன் பெற்று தொடர்ந்து பணம் அச்சடித்து வந்தோம், ஆனால், அந்த நடைமுறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

No comments: